Sports
கோவையில் தேசிய இளைஞர் திருவிழா தினத்தை முன்னிட்டு மராத்தான் போட்டி...!! உற்சாகமாக கலந்து கொண்ட மாணவர்கள்..
SimpliCity News Team · 30 Aug 2023
கோவை: தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு நேரு விளையாட்டு அரங்கில் துவங்கிய மாரத்தான் போட்டியை ஆட்சியர் கிராந்திகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக எச்.ஐ.வி, எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன்
ஒரு பகுதியாக, தேசிய, மாநில, மாவட்ட அளவில் இளைஞர் திருவிழா 2023-24 மூலம் பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது.
இந்நிலையில், கோவையில் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.
நேரு விளையாட்டு அரங்கில் துவங்கிய மாரத்தான் ஓட்டத்தை ஆட்சியர் கிராந்திகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த மாரத்தான் ஓட்டம் அவிநாசி சாலை, பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அண்ணா சிலை வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் நேரு விளையாட்டு அரங்கிற்கு வந்தடைந்தது.
இந்த மாரத்தான் ஓட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் உட்பட பலர் உற்சாகத்துடன் கலந்து கொண்டு ஓடினர்.
Related stories
Videos
Kumaraguru குழுவின் ReNew Shell Eco-Marathon 2026 கட்டகரில் வரலாற்று மேடைப் பதக்கம் பெற்றது
27 Jan 2026
Videos
கோவை மாணவர்கள் உருவாக்கிய ஹைட்ரஜன் வாகனம் சர்வதேச Shell Eco-Marathon போட்டியில் பங்கேற்கிறது
10 Jan 2026
Videos
KCT மாணவர்கள் Shell Eco-Marathon Asia Pacific-ல் ஹைட்ரஜன் சக்திக் கொண்ட வாகனத்துடன் பங்கேற்கிறார்கள்
06 Feb 2025
Events
Decathlon Chennai Kids Virtual Marathon!
30 Nov 2020
News
Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore
09 Sept 2026
News
இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு
01 Sept 2026